Wednesday, August 10, 2011

ஆரோக்கிய வாழ்வே குறைவற்ற செல்வம்

எப்படி ஆரோக்கியமாக வாழ்வது? எப்படி நோய் வராமல் தவிர்ப்பது?

  1. ஒரு நாளைக்கு மூன்று முறை தவறாமல் சத்துள்ள உணவை நேரம் தவராமல் சாப்பிடுவது மிகவும் அவசியம்.
  2. உணவு உண்பதற்க்கு முன்பும், பின்பும் கை மற்றும் வாயை நன்றாக கழுவுவது மிகவும் அவசியம்.
  3. உணவு விடுதிகளில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் பிரம்மச்சாரியாக இருத்தால், நீங்களே உங்கள் உணவை சமைத்து சாப்பிடுவது நல்லது.
  4. ஆட்டு இறைச்சியை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதற்க்கு பதிலாக கோழி அல்லது மீன் வகை உணவுகளை சாப்பிடுவது நல்லது. Sea Food (மீன், நண்டு, இறால்) மிகவும் நல்லது.
  5. இனிப்பு பண்டங்களை தவிர்ப்பது நல்லது.
  6. சமையல் எண்ணெய் உபயோகத்தை குறைத்துக்கொள்வது நல்லது.
  7. இரண்டு அல்லது மூன்று கொழுப்பு சத்து குறைந்த சமையல் எண்ணெய்களை உபயோக படுத்துவது நல்லது. உதாரணமாக நல்லெண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களை பயன்படுத்தலாம்.
  8. நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால், அதை மெல்ல மெல்ல நிறுத்திக்கொள்ள வேண்டும்.
  9. கொழுப்பு கரையும் ஒரே திரவம் ஆல்கஹால். வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மது அறுந்துவது நல்லது. மதுவின் அளவு 90 மில்லியை எட்டாமல் பார்த்துக்கொள்வது மிக அவசியம். போதைக்கு அடிமை ஆகிவிட கூடாது.
  10. உங்கள் உணவில் OATS பருப்பை அதிகமாக சேர்த்துக்கொண்டால் இதயம் சம்பத்தமான வியாதிகள் அண்டாது.
  11. எல்லாவற்றுக்கும் மெலாக தினமும் 1 அல்லது 2 முறை 1 மணி நேரமாவது உடற்பயிற்ச்சி செய்வதை வழக்கமாக வைத்துக்கொள்வது மிக சிறந்தது. உடற்பயிற்ச்சி செய்ய வாய்ப்பு இல்லையெனில், உடல் வியர்க்க வைக்கும் விளையாட்டில் ஈடுபடுவது நல்லது.

மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எப்படி பின்பற்றுவது? ஒழுக்கம் உங்கள் மனதை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள வேண்டும், கடமை ஒவ்வொரு கருத்தையும் உங்களது கடமையாக கருதி தினமும் பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment